சீனாவிலிருந்து பட்டு நூல் இறக்குமதி

சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் பட்டு நூல் இறக்குமதியை நிரந்தரமாக தடை செய்யமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தமிழகத்தில் பட்டுக்கூடு வளர்ப்பு அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக தரமுள்ள வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தியில்,  நாள்தோறும், இரண்டு டன்வெண்பட்டுக் கூடுகள்  உற்பத்தி செய்யப்பட்டு  கர்நாடகாவிற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

உள்நாட்டு உற்பத்தி தவிர, சீனாவிலிருந்தும் பட்டு நூல் இறக்குமதி செய்யப்படுகிறது. சீன இறக்குமதியால் உள்நாட்டில் பட்டுக்கூடுஉற்பத்தி செய்வோருக்கு, போதிய விலை கிடைக்கவில்லை. இதைகருத்தில் கொண்ட மத்திய அரசு, இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை 2003ல் விதித்தது. அதனால், இறக்குமதி குறைந்து,உள்நாட்டில் உற்பத்தியாகும் கூடுகளுக்குநல்ல விலை கிடைத்தது;சராசரியாக கிலோ 250 ரூபாய்க்குவிற்ற கூடுகள், 400 ரூபாய் வரைஉயர்ந்தது.



பட்டுக் கூடுகளுக்கு, 350ரூபாய்க்கு அதிகமாக விலை இருந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். எனவே,
பட்டுநூல் இறக்குமதியை நிரந்தரமாகதடை செய்ய வேண்டும்.
பட்டுக்கூடு உற்பத்தி தொழில் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு, கச்சா பட்டு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்'

கடந்த 2001-02ம் ஆண்டில், குறைந்த வரி விதிப்பில் சீனாவிலிருந்து 9,258 மெட்ரிக் டன் கச்சா பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், உள்நாட்டு பட்டுக்கூடுகளின் விலை, கிலோ 90 ரூபாய்க்கும், கச்சா பட்டு கிலோ 800 ரூபாய்க்கும் சரிந்தது; உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
கர்நாடகா மாநிலத்தில், 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மல்பெரி செடிகளை அழிக்க வேண்டிய நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதனால், 2003ல் கட்டுப்பாடு இல்லாமல், இந்தியாவிற்கு கச்சா பட்டு இறக்குமதி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வணிகவரி துறை அமைச்சகம் மூலம், இறக்குமதிக்கான வரிகளையும், கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.
இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த வரிவிதிப்பு, 2008ம் ஆண்டு வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்ததால்,

உள்நாட்டில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் மற்றும் கச்சா பட்டிற்கு நல்ல விலை கிடைத்தது. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை, பல மடங்கு உயர்ந்தது. தமிழகத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக பல ஆயிரம் ஏக்கரில், மல்பெரி செடிகள் பயிரிடப்பட்டன. வெண்பட்டுக் கூடுகளின் விலை, கிலோ 400 ரூபாயை தாண்டியது. இந்நிலையில், பட்டுத்துணிகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நெசவாளர்கள், கச்சாப்பட்டு மற்றும் பட்டு நூலிழை விலையை குறைக்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய அரசுக்கு கோரிக்கை அளித்தனர்.
"நெசவாளர்கள் எனப்படும் பெரிய தொழிலதிபர்களின் லாபத்திற்காக கட்டுப்பாடு இல்லாமல் கச்சா பட்டை இறக்குமதி செய்தால்,
பட்டுக்கூடு உற்பத்தி தொழிலை நம்பியுள்ள விவசாயிகள்,
ரீலர்கள், டிவிஸ்டர்கள், டையிங் மற்றும் பிரின்டிங் தொழிலில் ஈடுபடுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே,
சீனாவிலிருந்து கச்சா பட்டு இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும.
நன்றி:தினமலர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=192585
http://www.dinamalar.com/district_detail.asp?id=194669
http://mdmk.org.in/article/jan10/silk-industry-woes