இந்திய பட்டுக்கூடு சந்தை முடங்கும் அபாயம்!

சீனபட்டு இறக்குமதி சலுகையால் இந்திய பட்டுக்கூடு சந்தை முடங்கும் அபாயம்!

பிப்ரவரியில் ஏறுமுகத்தில் இருந்த பட்டுக்கூடு விலை மத்திய அரசு பட்ஜட்டில் சீனபட்டு இறக்குமதி சலுகை அறிவிப்பால் மார்ச் முதல் சரிவடைந்து 50 சதவீதம் விலை வீழ்ச்சிஅடைந்துள்ளது. சீனபட்டு விலை உயர்வுக்கு பின்னும் சீனபட்டு இறக்குமதியாவது இந்திய பட்டுச்ந்தையை முடக்கும் திட்டமிட்ட செயலாகும்.அரசு ஊழியர்களின் ஊதியம் பலமடங்குஉயர்ந்த சூழலில் ஊதிய உயர்வு கட்டுப்பாடு, அல்லது ஊதிய குறைப்பிற்கு ஏற்ப்பார்களா?விலைவாசி உயர்ந்துள்ள சூழலில் விவசாயிகளின் வருவாய் இழப்பை ஈடுசெய்யமுடியாது. பட்டுவஸ்திரஉற்ப்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் ஈடுசெய்ய முடியும். நெசவாகளர்களுக்கு மாற்றுவழி செய்வதை விட்டு விவசாயிகளை பலிகடாவாக்கி மத்திய அரசு பட்ஜட்அமைந்துள்ளது.
பட்டு புழு வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கைக்குஅரசு செவிசாய்காததால்
விரக்தி அடைந்த விவசாயிகள்பட்டு புழு வளர்ப்பை கைவிட முடிவுசெய்து மல்பரி தோட்டங்களை ஆடு,மாடுகள் மேய்ச்சல் தரிசாக விட்டுவிட்டனர்.


சீனபட்டு இறக்குமதி அறிவித்த சூழலில் சீன பட்டு ரூ 1400 லிருந்து ரூ 2600க்கு உயர்ந்துள்ளது
1 கிலோ சீனபட்டு நூல் $28 லிருந்து $54  ஆக உயந்துள்ளது.
இந்திய அந்நிய செலாவணி அதிகரிப்பதுடன் வரி வருவாய்  இழப்பு ஏற்ப்படுகிறது.
அதாயம் அடைவோர் யார்?
இந்திய பட்டுநூல் விலை இறங்கிய சூழலிலும் சீன பட்டுநூல் இறக்குமதியாவது இந்திய பட்டு வர்தகத்தை முடக்கும் செயலாகும்.
அப்பாவி விவசாயிகளின் உளைப்பையும்,முதலீட்டையும்  சுரண்டலாமா?
பட்டுவஸ்திர உற்ப்பத்தியாளர்கள்,ஏற்றுமதியாளர்கள்  உற்பத்தி செலவை நுகர்வோரிடம்
 ஈடு செய்ய முடியும் .விவசாயிகள்  நஸ்டத்தை ஈடு செய்ய முடியாது.
 ஓராண்டாக இதற்குநிலையான விலை கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் அதிகப்படியாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் மல்பெரி செடிகள் பயிரிடப்பட்டன.நெசவாளர்களை பாதுகாக்க மாற்று சலுகைஅறிவிக்கலாம், அரசு பட்டு வளர்ச்சிதுறை அலுவலர்கள் உயர் ஊதியம் பெற்று வளமாக இருக்கும்போது, விவசாயிகளை பலிகடா ஆக்குவது நம்பிக்கை மோசடியாகும்.
 மீண்டும் விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த மல்பெரி செடிகளை
அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டலாமா?
அரசு இதுகாறும் செலவிட்ட மாநியம் வீணாகலாமா?